தேசிய செய்திகள்

மத்திய பிரதேச விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தப்போவதாக மிரட்டிய வாலிபர் கைது + "||" + A youth has been arrested for threatening to hijack flights from Madhya Pradesh airports

மத்திய பிரதேச விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தப்போவதாக மிரட்டிய வாலிபர் கைது

மத்திய பிரதேச விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தப்போவதாக மிரட்டிய வாலிபர் கைது
மத்தியபிரதேச விமான நிலையங்களில் இருந்து விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லப்போவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போபால், 

மத்தியபிரதேச மாநில தலைநகர் போபால் விமான நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், போபால், இந்தூர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்திச்சென்று பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்போவதாக மிரட்டல் விடுத்தான்.

இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம், போபால் காந்திநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது.

போலீசார் தொலைபேசி அழைப்பு வந்த எண்ணை ஆய்வு செய்தபோது, ஷாஜபூர் மாவட்டம் சுஜால்பூர் நகரைச் சேர்ந்த 34 வயது வாலிபர் பேசியிருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் துருவித்துருவி விசாரணை நடந்து வருகிறது.

மேலும், இந்த மிரட்டல் காரணமாக, மத்தியபிரதேசத்தில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போபாலில் இருந்து மும்பை புறப்பட்ட ஒரு விமானம், பலத்த சோதனைக்கு பிறகு பயணத்தை தொடங்கியது.

இருப்பினும், இது வெற்று மிரட்டல் என்று போலீசார் தெரிவித்தனர்.