தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த முயற்சியில் முன்னேற்றம் + "||" + Progress in India's efforts at the World Trade Organization to grant a patent exemption for the corona vaccine

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த முயற்சியில் முன்னேற்றம்

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த முயற்சியில் முன்னேற்றம்
கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிப்பதற்கு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்து முயற்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு காப்புரிமையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் முறையிட்டன. இதற்காக உலக வர்த்தக அமைப்பின் டிரிப்ஸ் ஒப்பந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.கொரோனா தடுப்பூசிக்கு இந்த காப்புரிமை விலக்கு கிடைத்தால், பல நாடுகள் அவற்றை தயாரிக்கவும், குறைவான விலையில் வினியோகிக்கவும் வழி பிறக்கும்.இந்த முன்மொழிவு திட்டத்துக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்பட 62 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பேச்சுவார்த்தைக்கு ஒருமித்த கருத்து
இந்தியா எடுத்துள்ள இந்த முயற்சி வெற்றி பெற்று கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமைக்கு தற்காலிக விலக்கு அளித்தால், அது அந்த நாளில் இருந்து 3 ஆண்டுக்கு அமலில் இருக்கும்.இந்த விவகாரம், உலக வர்த்தக அமைப்பின் 
டிரிப்ஸ் கவுன்சிலில் நேற்று முன்தினம் விவாதத்துக்கு வந்தது.அப்போது இது தொடர்பாக டிரிப்ஸ் கவுன்சிலின் தலைவர் உரையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து உருவானது. இந்தபேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதில் முடிவு எடுக்கப்படும்.இந்த விவகாரத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய முன்னேற்றம்

இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை செயலாளர் அனுப் வாதவன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமையில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் முன்மொழிவு திட்டம் தொடர்பாக தலைவர் உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தையானது முன்னோக்கி செல்லும் வழியாக அமையும். இதன் அர்த்தம், காப்புரிமை விலக்கு அளிக்கும் திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை பரந்த மற்றும் கொள்கை அளவில் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டன என்பதுதான்.இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மேற்கொண்ட முன்மொழிவு திட்டம், அந்த வகையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வேகமாக அடைந்துள்ளது.அடுத்த மாத இறுதிக்குள் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது ஒரு சாதகமான முன்னேற்றம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் ; மாநில அரசுகளுக்கு 74 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு ஆர்டர்
மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மேலும் 74 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை
கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
3. ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகள் வழங்கி உதவ வேண்டும்-உலக சுகாதார அமைப்பு
ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
4. கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே நடத்தும்; 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி
தடுப்பூசியின் மொத்த கட்டுப்பாட்டை இப்போது மத்திய அரசு திரும்பப் பெறுகிறது, அடுத்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும்.
5. கோவாக்சினை விட கோவிஷீல்ட்டு கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது - ஆய்வில் தகவல்
கோவாக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என ஆய்வில் முடிவுகள் தெரிவிக்கின்றன.