கொரோனா 3-ம் அலைக்குத் தயாராகும் டெல்லி: 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 16 Jun 2021 11:37 AM GMT (Updated: 2021-06-16T17:07:29+05:30)

கொரோனா 3-ம் அலைக்குத் தயாராகும் டெல்லி: 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி ஜூன் 17 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்

புதுடெல்லி: 

கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க ஏதுவாக ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க உள்ளதாக டெல்லி முதல் மந்திரி  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தாக்கும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதனை சமாளிக்க வசதியாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில், சுமார் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க முடிவு செய்திருப்பதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஜூன் 28-ஆம் தேதி முதல் இந்த பயிற்சி தொடங்கவிருப்பதாகவும், முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்கு  இரண்டு வாரங்கள் செவிலியர் பணி மற்றும் உயிர்காக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் இளைஞர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நாட்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஜூன் 17 முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story