அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து


அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து
x
தினத்தந்தி 18 Jun 2021 7:49 PM GMT (Updated: 18 Jun 2021 7:49 PM GMT)

அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கொரோனா சூழல் கருதி, 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தமிழகத்தை போல் தற்போது அசாமிலும் இந்த இரு தேர்வுகளையும் ரத்து செய்வதாக கல்வி மந்திரி ரனோஜ் பேகு நேற்று அறிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.சி., ஐ.எஸ்.சி.இ. அமைப்புகளின் பிளஸ்-2 மதிப்பெண் மதிப்பீட்டு முறையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பதால், அதன்பிறகு மாணவர்-பெற்றோர் அமைப்புகள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து தேர்வுகளை ரத்துசெய்திருப்பதாக அவர் கூறினார்.

Next Story