அசாமில் கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு


அசாமில் கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jun 2021 8:23 PM GMT (Updated: 18 Jun 2021 8:23 PM GMT)

அசாமில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.

கவுகாத்தி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள் விளையாட்டரங்கு ஒன்றில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் கொரோனா தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அம்மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா உள்பட பலர் அருகில் உள்ளனர். இந்த மருத்துவமனை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அசாமில் தற்போது வரை கொரோனா தொற்றுக்கு 35,631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story