தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 21 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா பாதிப்பு + "||" + 21 Cases Of Delta Plus Variant In Maharashtra, Says State Health Minister

மராட்டியத்தில் 21 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் 21 பேருக்கு  ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா பாதிப்பு
இந்த டெல்டா வைரஸ் உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
மும்பை, 

இந்தியாவில் கொரோனாவின் மாறுபாடு வகையான டெல்டா கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படுத்த டெல்டா வகை கொரோனா வைரசே காரணமாக சொல்லப்பட்டது. தற்போது 2-வது அலை பரவல் தணியத்தொடங்கியுள்ள நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

 புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.  இந்த நிலையில், மராட்டியத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

2. மராட்டியத்தில் மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251- ஆக உயர்வு
மராட்டியத்தில் கனமழை தொடர்பான சம்பங்களில் சிக்கி 251- பேர் உயிரிழந்தனர்.
5. மராட்டியத்தில் கனமழையால் கடும் பாதிப்பு
மராட்டியத்தில் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.