மத்திய அரசின் கொரோனா நிர்வாகம்: வெள்ளை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை செய்த ராகுல்காந்தி


மத்திய அரசின் கொரோனா நிர்வாகம்: வெள்ளை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை செய்த ராகுல்காந்தி
x
தினத்தந்தி 22 Jun 2021 9:32 AM GMT (Updated: 22 Jun 2021 9:32 AM GMT)

காங்கிரஸ் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் நோக்கமே கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவது ஆகும் என ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி:

 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்திய அரசின் கொரோனா  நிர்வாகம் குறித்த காங்கிரஸ் கட்சியின் "வெள்ளை அறிக்கை" ஒன்றை வெளியிடார். மேலும் கொரோனா  மூன்றாவது அலை வைரசுக்கு தயாராக வேண்டும் என்று மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ராகுல்காந்தி கூறியதாவது:-

கொரோனாவின்  முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் மத்திய அரசின் நிர்வாகம் "பேரழிவு" என்பது தெளிவாகிறது."இது ஏன் பேரழிவு தரக்கூடியது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன, அந்த காரணங்களை எங்கள் வெள்ளை அறிக்கையில்  சுட்டிக்காட்ட முயற்சித்தோம்.இது வரவிருக்கும் மூன்றாவது அலைக்கு எவ்வாறு நாம் செயல்படுவது  என்பது பற்றிய ஒரு வரைபடமாகும்.

தவறு நடந்ததைப் பற்றிய தகவல்களையும் நுண்ணறிவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.

வெள்ளை அறிக்கையின்  நோக்கம் அரசாங்கத்தை நோக்கி விரல் காட்டுவது அல்ல, ஆனால் மூன்றாவது அலை நோய்த்தொற்றுக்குத் தயாராவதற்கு தேசத்திற்கு உதவுவதாகும்.

அரசாங்கம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதற்கான மையத் தூண் தடுப்பூசி ஆகும். நாம் விரைவில் 100 சதவீத தடுப்பூசி போடுவதைக் கடந்து செல்வது முக்கியம். நம்மிடம் ஒரு தடுப்பூசி உத்தி இருப்பது மிகவும் முக்கியம். அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்… மருத்துவமனைகள், ஆக்ஸிஜன்,மருந்துகள்  தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலை மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதைவிட மூன்றாவது மோசமாக இருக்கும்.

நேற்று அதிக தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. ஆனால் இது தொடர் நிகழ்வுகள் அல்ல. ஆனால் இந்த செயல்முறையை ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் - முழு மக்களுக்கும் தடுப்பூசி போடும் வரை அரசு செயல்பட வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில்  அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும.  எந்தவிதமான சார்பு நிலையும் இருக்கக்கூடாது என்றும் அவற்றை பா.ஜனதா  எதிர்க்கட்சி மாநிலமாக பார்க்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.



Next Story