கர்நாடகத்தில் மேலும் 3,310-பேருக்கு கொரோனா தொற்று


கர்நாடகத்தில் மேலும் 3,310-பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Jun 2021 5:58 PM GMT (Updated: 2021-06-25T23:28:15+05:30)

கர்நாடகத்தில் நேற்று 3,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று சற்று பாதிப்பு குறைந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் இன்று 3,310- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,524- ஆக உள்ளது. தொற்றால் இன்று மட்டும் 114- பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 07 ஆயிரத்து 195- ஆக இருக்கிறது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 84 ஆயிரத்து 997- ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,539- ஆக உள்ளது.  கர்நாடகத்தில் நேற்று 3,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று சற்று பாதிப்பு குறைந்துள்ளது. 


Next Story