3-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் இருக்கும் திட்டம் என்ன? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி


3-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் இருக்கும் திட்டம் என்ன? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 25 Jun 2021 7:05 PM GMT (Updated: 2021-06-26T00:35:24+05:30)

டெல்டா பிளஸ் பரவல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரசின் மற்றொரு திரிபு வகையான டெல்டா பிளஸ் தொற்று இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த வைரஸ், கொரோனாவின் 3-வது அலையை தோற்றுவிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் பரவல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘டெல்டா பிளஸ் மாறுபாடு தொடர்பாக மோடி அரசுக்கு கேள்விகள்: டெல்டா பிளஸ்சை கண்டறியவும், அதை தடுப்பதற்காகவும் அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளாதது ஏன்? இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படி இருக்கிறது? அது குறித்த தகவல்கள் எப்போது கிடைக்கும்? 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் இருக்கும் திட்டம் என்ன?’ என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Next Story