டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று உயர்வு


டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று உயர்வு
x
தினத்தந்தி 25 Jun 2021 10:57 PM GMT (Updated: 2021-06-26T04:27:54+05:30)

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் வியாழக்கிழமை 0.14 சதவிகிதமாக இருந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 115- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு விகிதம்  சற்று உயர்ந்து 0.15 சதவிகிதமாக உள்ளது. வியாழக்கிழமை தொற்று பாதிப்பு விகிதம் 0.14- ஆக இருந்தது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 198- பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77,477- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 093- தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story