அரசு பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத்தேர்வு கிடையாது- ஆந்திர அரசு அதிரடி


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 27 Jun 2021 6:22 PM GMT (Updated: 2021-06-27T23:52:01+05:30)

ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

விஜயவாடா,

குரூப் 1 உள்பட அனைத்து விதமான  அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் இனி நேர்முகத்தேர்வு கிடையாது என்று ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதன்படி,ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது.

முன்னதாக, குரூப்-1 தேர்வு தவிர ஏனைய அனைத்து பணிகளுக்குமான தேர்வுக்ளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படாது என்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர அரசு அறிவித்து  இருந்தது. இந்த நிலையில், குரூப் 1 தேர்வுகளுக்கும் நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.


Next Story