தேசிய செய்திகள்

விருந்தில் ஆட்டுக்கறி இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன் + "||" + groom refused to marry with one bride due to absence of mutton in the food and married another on same night

விருந்தில் ஆட்டுக்கறி இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன்

விருந்தில் ஆட்டுக்கறி  இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன்
திருமணத்தின் போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜஜ்பூர்:

ஓடிசா மாநிலம் ஜஜ்பூரரை சேர்ந்த ராமகாந்த் பத்ரா( வயது 27) என்பவருக்கு கடந்த புதனன்று சுகிந்தா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு  பெண்ணுடன் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர் புடைசூழ வந்த ராமகாந்த் பத்ரா மணமகள் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு மணமகள் வீட்டார்  அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ஆட்டுக்கறி இடம் பெறவில்லை என மாப்பிள்ளை வீட்டில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் மோதல் உருவாகும்  சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்த தகவல் மணமகன் காதிற்கு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன்  கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு ஒரு உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். ஆட்டுக்கறி போடவில்லை என மணமகன் ராமகாந்த் கோபமடைந்து திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதே இரவில்  புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ராமகாந்த்  மணந்தார்.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.மணப்பெண்ணின்  தரப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸைத் தொடர்பு கொண்டால், குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது ஒடிசா
ஆண்களுக்கான 12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்கள் ஆர்வம் காட்டின. இந்த நிலையில் இந்த வாய்ப்பு ஒடிசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2. மனிதர்களைப் போல பற்கள்,செம்மறி ஆட்டைப் போன்ற தலை மீனவர் வலையில் சிக்கிய அதிசயமீன்
மீனின் தலை செம்மறியாட்டு தலையை ஒத்திருப்பதால் ஷீப்ஸ்ஹெட் (ஆட்டுதலை)என பெயரைப் பெற்றது.
3. நாடாளுமன்றத்தில் புகுந்த எலி...! பெண் எம்.பி.க்கள் அலறல் கூட்டம் ஒத்திவைப்பு
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஓடியதால் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
4. நவீன வசதிகளுடன் உலகில் 196 அடி ஆழம் உள்ள டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறப்பு
நவீன வசதிகளுடன் உலகில் அதிகம் ஆழம் கொண்ட 196 அடி ஆழ டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது.
5. உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ; ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண கூடும் மக்கள்
வங்காள தேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர்.