தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி + "||" + Accept Covishield, Covaxin Or Face Mandatory Quarantine, India Tells EU

தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி

தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி
கோவிஷீல்டு, கோவேக்சின் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாவிடில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இந்திய வருபவர்களுக்கு கட்டாய தனிமை நடைமுறை பின்பற்றப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அல்லது கிரீன் பாஸ் இருந்தால் மட்டும்தான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடியும். ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணமாகவும் இது செயல்படும்.

இந்த நிலையில், புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கிரீன் பாஸ் திட்டத்தின் கீழ் பயணம் செய்ய தகுதி அற்றவர்கள் என்ற அச்சம் உள்ளது.  அதேபோல், கோவேக்சின் தடுப்பூசிக்கும் ஐரோப்பிய யூனியன் மருந்து முகமை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டிப்பாக டிஜிட்டல் சான்றிதழில் அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனை இந்தியா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பரஸ்பர கொள்கையை இந்தியா பின்பற்ற முடிவு செய்து இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள்  கூறுகின்றன. 

அதாவது,  கோவேக்சின், கோவிஷீல்டு சான்றிதழ்களை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இந்தியா  வருபவர்களுக்கு கட்டாய தனிமை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இது குறித்து இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதரிடம் கேட்ட போது,  தடுப்பூசி விவகாரத்தில் ஒவ்வொரு ஒப்புதல் நடைமுறையும் தங்களின் சொந்த விதிகளின்படியே நடைபெறும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவிஷீல்டு தடுப்பூசி டோசுகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளியால் சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது-மத்திய அரசு
கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோசுகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி கொடுப்பதால் கொரோனாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது என மத்திய அரசு கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
2. கோவிஷீல்டு தடுப்பூசி போட 1½ மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்
ஊஞ்சலூர் அருகே கோவிஷீல்டு தடுப்பூசி போட பொதுமக்கள் 1½ மணி நேரம் காத்திருந்தனா்.
3. தடுப்பூசி தட்டுப்பாடு; கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்படுவதில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் சுகாதார மந்திரி சந்திப்பு
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரே தடுப்பூசி கோவேக்சின் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
5. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்-அடார் பூனாவாலா
கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.