டெல்லியில் பிரதமருடன் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு


டெல்லியில் பிரதமருடன் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 2 July 2021 11:26 PM GMT (Updated: 2 July 2021 11:26 PM GMT)

டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை இன்று நேரில் சந்தித்து பேசுகின்றனர்.



புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அவற்றில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர். காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் டாக்டர் சி. சரஸ்வதி என 4 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது.

எனினும், மற்ற 16 தொகுதிகளில் அந்த கட்சியானது தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசுகின்றனர்.

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்றனர்.  அவர்கள் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசுகின்றனர்.

டெல்லி சென்றுள்ள அவர்கள் இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றனர்.  எம்.எல்.ஏ.க்கள் சந்திப்புக்காக பிரதமர் நேரமும் ஒதுக்கியுள்ளார்.  அப்போது வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் வாழ்த்து பெற உள்ளனர்.  மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அப்போது ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story