தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Andhra Pradesh reports 3,175 fresh cases, 3,692 recoveries, and 29 deaths in past 24 hours

ஆந்திராவில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திராவில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,175 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் அரசு மேற்கொண்ட ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.  

இந்த நிலையில் இன்று ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,02,923 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை 12,844 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 35,325 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 18,54,754 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் மேலும் 2,665-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. ஆந்திராவில் இன்று 4,576 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஆந்திராவில் தற்போது 30,300 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கால்வாயில் தவறி விழுந்த இளைஞர் - காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழப்பு
கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 3,479 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 25 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,715 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.