உத்தரபிரதேசத்தில் மணமகனின் வீட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்த மணப்பெண்


உத்தரபிரதேசத்தில் மணமகனின் வீட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்த மணப்பெண்
x
தினத்தந்தி 5 July 2021 8:32 PM GMT (Updated: 5 July 2021 8:32 PM GMT)

உத்தரபிரதேசத்தின் பதான் நகர பா.ஜனதா துணைத்தலைவராக இருப்பவர் வேத்ராம் லோதி. இவரது மகள் சுனிதாவுக்கும், பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடந்தது.

பின்னர் தனது தந்தை வீட்டில் இருந்த சுனிதா, தனது கணவரின் ஆலம்பூர் கோட் கிராமத்தின் தலைவி பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஊரின் வாக்காளராக இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால்தான் டிசம்பரில் இந்த பதிவுத்திருமணம் நடத்தப்பட்டது. தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தாலும், சுனிதா தனது தந்தை வீட்டிலேயேதான் இருந்தார். அவருக்காக ஒமேந்திர சிங்கும் பிரசாரம் செய்யவில்லை. எனினும் ஆலம்பூர் கோட் கிராமத்தின் தலைவியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி சுனிதாவுக்கும், 
ஒமேந்திர சிங்குக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக மணமகனின் வீட்டுக்கு சுனிதா, ஹெலிகாப்டரில் சென்று இறங்கினார்.

கணவரின் கிராமத்துக்கு தலைவியாக இருந்ததால், தனது செல்வாக்கை காட்டுவதற்காக அவர் ஹெலிகாப்டரில் சென்று இறங்கியதாக கிராமத்தினர் தெரிவித்தனர். எனினும் மணமகனின் வீட்டுக்கு மணப்பெண் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை அந்த கிராமத்தினர் பெரும் வியப்புடன் பார்த்தனர்.

Next Story