“சோனியா காந்தியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” - பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர்சிங்


“சோனியா காந்தியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” - பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர்சிங்
x
தினத்தந்தி 6 July 2021 4:35 PM GMT (Updated: 6 July 2021 4:35 PM GMT)

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி, 

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசி இருந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சோனியாவை சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதித்தேன். பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம். வரப்போகும் தேர்தலிலதான் கவனம் செலுத்தப்படும் என்று அமரீந்தர் சிங் தெரிவித்தார். 

Next Story