தேசிய செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மந்திரிகள் சந்திப்பு + "||" + Newly appointed Union Ministers meet with BJP National leader J.P. Natta

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மந்திரிகள் சந்திப்பு

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மந்திரிகள் சந்திப்பு
மத்திய மந்திரிகளாக புதிதாக பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அக்கட்சி தலைமையகத்தில் இன்று சந்திக்கின்றனர்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடந்தது.  இதில் 43 பேர் இடம்பெற்றனர்.  புதிய மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய மந்திரிசபையில், புதிதாக 15 மந்திரிகள், 28 இணை மந்திரிகள் பதவியேற்று கொண்டனர்.  இவர்களில் 36 பேர் புதியவர்கள் ஆவர்.

ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், சர்வானந்தா சோனோவால் மற்றும் பசுபதி குமார் பாரஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மத்திய மந்திரிகளாக பதவியேற்று உள்ளனர். 7 பெண் எம்.பி.க்கள் மந்திரிகளாக பதவியேற்று கொண்டுள்ளனர்.  தவிர, 7 இணை மந்திரிகள் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில், துறை சார்ந்த மத்திய மந்திரிகள் அதற்கான அலுவலகங்களில் இன்று முறைப்படி தமது பொறுப்புகளை ஏற்று கொண்டனர்.  மத்திய மந்திரிகளாக புதிதாக பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அக்கட்சி தலைமையகத்தில் இன்று சந்திக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளை மாளிகை சென்று சேர்ந்த பிரதமர் மோடி; அமெரிக்க அதிபருடன் சந்திப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.
2. வைகோவுடன் இலங்கை மந்திரி சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், அந்நாட்டு தோட்ட வீடமைப்பு சமூக உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான ஜீவன் தொண்டைமான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்தார்.
3. இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு.
4. கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு விவகாரம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கவர்னருடன் சந்திப்பு
‘‘கோடநாடு வழக்கை தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கையில் எடுத்திருக்கிறது. அரசின் நிர்ப்பந்தம் காரணமாக போலீசார் மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்’’, என கவர்னரை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. மத்திய ராணுவ மந்திரியுடன் நடிகர் அஜய் தேவ்கன் சந்திப்பு
பாகிஸ்தானை போரில் இந்தியா வெற்றி பெற்றது பற்றிய திரைப்பட வெளியீட்டுக்கு முன் ராணுவ மந்திரியை நடிகர் அஜய் தேவ்கன் சந்தித்து பேசியுள்ளார்.