பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம்
x
தினத்தந்தி 10 July 2021 6:31 AM GMT (Updated: 10 July 2021 6:31 AM GMT)

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மந்திரி சபை கடந்த 7 ந்தேதி அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது. அதில் புதிதாக 43 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மூத்த மந்திரிகள் 12 பேர் ராஜினாமா செய்ததோடு, புதிதாக 43 பேர் கேபினட் மந்திரிகளாகவும்,  இணை மந்திரிகளாகவும் பதவியேற்று  கொண்டனர். அமைச்சரவையில் மொத்தம் 15 கேபினட் மந்திரிகள் சேர்க்கப்பட்டனர், 28 பேருக்கு இணை மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரி சபையில்  உள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி (புதன்கிழமை) மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது. மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14-ம் கூட உள்ள மத்திய மந்திரி சபை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

முன்னதாக, மந்திரி சபையில் புதிதாக இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story