தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: மத்திய அரசு + "||" + We've deputed Central teams in 11 states so that they can help the state govts in #COVI19 mgmt.

கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: மத்திய அரசு

கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: மத்திய அரசு
கொரோனா 3-வது அலை பற்றிய கணிப்புகளை வானிலை முன் அறிவிப்பு போல சாதாரணமாக மக்கள் எடுத்துக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் படையெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முகக்கவச்ம் உள்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல்  மக்கள் பொது இடங்களில் கூடுவது 3-வது அலை உடனடியாக ஏற்பட வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கொரோனா  3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகத்தின் மூத்த அதிகாரி  இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதே சமயம், சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை குறைந்த போதிலும், சீராக குறைவதில்லை.

சட்டீஸ்கர், கேரளம், ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 11 மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. நாம் மூன்றாம் அலை பற்றி பேசி வரும் நிலையில், அதன் தீவிரத்தன்மையையும், அதை தடுப்பதற்கான பொறுப்புகளையும் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலையை தடுக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு சாமானிய மக்களின் சிரமங்கள் தெரியாது - வைகோ பேட்டி
மத்திய அரசு, சாமானிய மக்கள் நடுத்தர மாதாந்திர ஊழியர்களின் கஷ்டங்களை நினைத்து பார்ப்பதில்லை என்று வைகோ கூறினார்.
3. ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு: மத்திய நிதியமைச்சகம்
அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
4. மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5. மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை 82.57 கோடி தடுப்பூசிகள் வினியோகம்
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இதுவரை 82.57 கோடி தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.