வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா 24-ம் தேதி ஆலோசனை


வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா 24-ம் தேதி ஆலோசனை
x
தினத்தந்தி 22 July 2021 5:26 PM GMT (Updated: 22 July 2021 5:26 PM GMT)

மத்திய உள்துறை மந்திரி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் மேகாலயாவின் ஷில்லாங் செல்கிறார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் மேகாலயாவின் ஷில்லாங் செல்கிறார். அங்குள்ள அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையை அவர் தொடங்கி வைக்கிறார். 

மேலும் ஷில்லாங்கில் நடைபெறும் கூட்டத்தில் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய மந்திரி அமித்ஷா, அவர்களிடம் மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் கொரோனா தடுப்பு பணியின் முன்னேற்றத்தை கேட்டறிகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய கலாசாரம், சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டி, அறிவியல் தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இதுதவிர விண்வெளி ஆய்வு மையத்தையும் அமித்ஷா பார்வையிடுகிறார்.


Next Story