மேற்கு ரெயில்வே மண்டலத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு வாபஸ்; மீண்டும் ரூ.10 வசூலிப்பு


மேற்கு ரெயில்வே மண்டலத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு வாபஸ்; மீண்டும் ரூ.10 வசூலிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 8:57 PM GMT (Updated: 2021-07-24T02:27:51+05:30)

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரெயில்வே பிளாட்பாரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்தது. கடந்த மார்ச் மாதம் இந்த விலை உயர்வு அமலில் உள்ளது.இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை மையமாக கொண்ட மேற்கு ரெயில்வே மண்டலத்தின் ராட்லம் பிரிவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு நேற்று முதல் திரும்பப்பெறப்பட்டு உள்ளது. 

ரெயில்வேயின் ராட்லம் டிவிஷனின் கீழ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்தின் ஏராளமான ரெயில் நிலையங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. “கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் ரூ.30 ஆக வசூலிக்கப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் 10 ரூபாய்க்கு கொண்டுவரப்பட்டு உள்ளது” என்று மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.

Next Story