மராட்டிய மாநில வெள்ளம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு ;100 பேர் மாயம்

மராட்டிய மாநில வெள்ளம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு ;100 பேர் மாயம்
x
தினத்தந்தி 26 July 2021 9:01 AM GMT (Updated: 2021-07-26T14:31:18+05:30)

மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சதாரா மாவட்டத்தில் பதான் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.

மும்பை

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக ரத்னகிரி, ராய்காட், சத்தாரா, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. மழைக்கு மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கு 164 யை தாண்டி உள்ளது. மொத்தம் 164 உடல்கள் மீடகப்பட்டு உள்ளன. இதேபோல 100-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர் என அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

"சுமார் 2.29 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  25,564 விலங்குகள் இறந்து உள்ளன. மொத்தம் 56 பேர் காயமடைந்தனர், மேலும் 1028 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
மேலும், 7,832 பேர் தற்போது 259 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மராட்டிய முதல் மந்திரி  உத்தவ் தாக்கரே சதாரா மாவட்டத்தில் பதான் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.

தற்போது மழை சற்று ஓய்ந்து வெள்ளம் வடிந்து வருவதால் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த சாலைகள், ரெயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

Next Story