ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண் டெல்லியில் கைது


ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண் டெல்லியில் கைது
x
தினத்தந்தி 26 July 2021 10:47 PM GMT (Updated: 2021-07-27T04:17:07+05:30)

கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண்ணை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,

டெல்லியில் விமான நிலையத்தில் மத்திய ஆயுத படையினர் சந்தேகத்திற்குரிய வகையிலான வெளிநாட்டு பெண் ஒருவரை சோதனை செய்தனர்.  அதில், அவரிடம் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்துகளின் 70 குப்பிகள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றின் மதிப்பு ரூ.3.5 லட்சம் என கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், தான்சானியா நாட்டை சேர்ந்த அய்மன் குல்சன்ராசா சையது என்பது தெரிய வந்தது.  அவரை கைது செய்து, மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story