டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 July 2021 1:00 PM GMT (Updated: 2021-07-31T18:30:02+05:30)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- டெல்லியில்  புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,265 ஆக உயர்ந்துள்ளது. 70,355 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 58 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 56 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்று பலியாகியுள்ளார். இதுவரை மொத்தம் 14,10,631 பேர் குணமடைந்துள்ளனர். 25,053 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புடன் 581-பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story