மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொள்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே


மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொள்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 2 Aug 2021 1:37 AM GMT (Updated: 2 Aug 2021 1:37 AM GMT)

மிரட்டும் வகையிலான பேச்சுகளை எல்லாம் பொறுத்து கொள்ள மாட்டோம், அதுபோல பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

தக்க பதிலடி
பா.ஜனதா எம்.எல்.சி. பிரசாத் லாட் நேற்று முன்தினம் மாகிமில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், "நான் எப்போது மாகிம் வந்தாலும் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. நாங்கள் சேனா பவனை தகர்த்துவிடுேவாம் என சிவசேனாவினர் பயப்படுகின்றனர். நேரம் வரும் போது, அதை நாங்கள் செய்வோம்’’ என்றார். பின்னர் அவர் சேனாவை இடிக்கும் வகையில் பேசவில்லை என விளக்கம் அளித்து வீடியோவும் வெளியிட்டார்.இந்தநிலையில் நேற்று ஒர்லியில் நடந்த பி.டி.டி. சீரமைப்பு திட்ட தொடக்க விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பிரசாத் லாடின் கருத்து குறித்து ஆவேசமாக பேசிய முதல்-மந்திரி, மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொள்ள மாட்டோம், அதுபோல பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.இதேபோல அவர், தபாங் படத்தில் இடம் பெற்று இருக்கும், 'தபாட் சே டர் நஹி லக்தா (அறைவதற்கு பயம் இல்லை) ' என்ற வரிகளையும் குறிப்பிட்டார்.

ஒருவரும் பேசக்கூடாது

மேலும் அவர் கூறியதாவது:-
நீங்கள் தாக்கினால், எழுந்து நிற்க முடியாத அளவிற்கு உங்களை திருப்பி அடிப்போம். எனவே எங்களை அறைவது போன்ற பேச்சை ஒருவரும் பேச கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டம் பற்றி பேசுகையில், "பி.டி.டி. சால் வரலாற்று பின்ணணியை கொண்டது. எனவே எந்த விலையானாலும் அதன் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். இங்கு போராட்ட வீரர்கள் உயிரை நீத்து உள்ளனர். ஒன்றுப்பட்ட மராட்டிய இயக்கத்தையும் கண்டுள்ளது" என்றார்.

இதேபோல விழாவில் பேசிய சரத்பவார், ‘‘பி.டி.டி. சால்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு சீரமைக்கப்படும் வீடுகளில் மராத்தி பேசும் மக்கள் மீண்டும் தங்க வைக்கப்பட வேண்டும்" என்றார்.

Next Story