கர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு உத்தரவு


கர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2021 3:58 AM GMT (Updated: 3 Aug 2021 3:58 AM GMT)

கர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில், நகரங்களில் சொத்து வரி கடந்த ஜூலை மாதத்தில் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த சலுகை காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதையடுத்து நகர பகுதிகளில் சொத்து வரியை 5 சதவீத தள்ளுபடியுடன் செலுத்தும் சலுகை காலத்தை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த மாதத்திற்குள் வரியை செலுத்த தவறினால், அடுத்த மாதம் சொத்து வரிக்கு 2 சதவீத அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

Next Story