திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - அதிகாரிகள் எச்சரிக்கை


திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2021 7:00 PM GMT (Updated: 3 Aug 2021 7:00 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிலில் மீண்டும் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கொரோனா 3-வது அலையை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லை என்றால் பொது சுகாதார திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story