டெல்லியில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Aug 2021 12:23 PM GMT (Updated: 2021-08-10T17:53:33+05:30)

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. 

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 36 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 11 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 1 நபர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இதனால், டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.

Next Story