வைரசை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்: கேரள சுகாதாரத்துறை மந்திரி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Aug 2021 9:20 PM GMT (Updated: 12 Aug 2021 9:20 PM GMT)

மாநிலத்தில் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் நேற்று ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 ஆயிரத்து 445 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 111 பேர் சுகாதார பணியாளர்கள் என்றும், 73 பேர் அண்டை மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள் என்றும் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு ஒரே நாளில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது. தொற்று குணமாகி 20 ஆயிரத்து 723 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு 3 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நாங்கள் அதிக தடுப்பூசிகளைக் கோரியுள்ளோம். கடந்த வாரத்தை விட கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், மருத்துவமனை & ஐசியு பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது வைரசின் நிலைமை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இல்லை என்பதை இது காட்டுகிறது. வைரசை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story