சுதந்திர தினம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு


சுதந்திர தினம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 3:31 AM GMT (Updated: 2021-08-14T09:01:21+05:30)

காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமும் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீநகர், 

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காஷ்மீரிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

'காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமும் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதல் முயற்சியை முறியடிக்க பல்வேறு இடங்களில் துணை ராணுவப் படையினரும் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்' என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்ரீநகரில் உள்ள ஷோ-ஏ-காஷ்மீா் கிரிக்கெட் மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. அந்த விழாவில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றவுள்ளாா்.


Next Story