ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை  மீட்க மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது
x
தினத்தந்தி 16 Aug 2021 4:23 AM GMT (Updated: 2021-08-16T11:32:31+05:30)

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. அவர்களிடையே பீதி நிலவுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று 129 பயணிகளுடன் இந்தியாவுக்கு  விமானம் வந்தது. இந்த நிலையில், இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் காபூல் செல்கிறது. இரவு  8.30 மணிக்கு செல்லும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,  தற்போது 12.30 மணிக்கே புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story