மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா முன்வர வேண்டும்: தேவேகவுடா

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மனித நேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா முன்வர வேண்டும். நமது சுதந்திர கொள்கையை வளர்ப்பது தவிர்த்துவிட்டு நமது அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் அமைதியை வளர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை இந்தியாவிற்கும், முழு பிராந்தியத்திற்கும் கடினமான நேரம். ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story