தேசிய செய்திகள்

காஷ்மீரில் இருந்து மோடியை பார்ப்பதற்காக நடைபயணமாக டெல்லி வரும் வாலிபர் + "||" + Kashmiri youth embarks on 900-km trek to meet PM Modi in Delhi

காஷ்மீரில் இருந்து மோடியை பார்ப்பதற்காக நடைபயணமாக டெல்லி வரும் வாலிபர்

காஷ்மீரில் இருந்து மோடியை பார்ப்பதற்காக நடைபயணமாக டெல்லி வரும் வாலிபர்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் ஷாலிமர் பகுதியை சேர்ந்தவர் பகிம் நசிர் ஷா (வயது 28). பிரதமர் மோடி மீது மிகுந்த பற்று கொண்ட இவர், அவரை நேரில் பார்ப்பதற்கு பலமுறை முயன்றுள்ளார். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
எனவே பிரதமரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் இருந்து டெல்லி நோக்கி நடைபயணம் தொடங்கி இருக்கிறார். சுமார் 815 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தில் 200-க்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவை கடந்து நேற்று உதம்பூரை அடைந்தார்.

அப்போது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக வலைத்தளத்தில் அவரை நான் பின்தொடர்கிறேன். அவரது பேச்சும், செயலும் என் இதயத்தை தொட்டுள்ளன’ என்று கூறினார். கடந்த 2½ ஆண்டுகளாக பிரதமரை சந்திக்க முயன்றும் முடியாமல் போகவே இந்த முறை கடினமான பயணத்தை தொடங்கியிருப்பதாக கூறிய நசிர் ஷா, இந்த முறை அவரை சந்திக்க முடியும் என நம்புவதாகவும், அப்படி சந்தித்தால் தனது கனவு நிறைவேறும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கதிசக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கான ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான ‘கதிசக்தி’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
2. ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி
குஜராத் முதல்-மந்திரி, இந்தியாவின் பிரதமர் என ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
3. ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களை மேம்படுத்துவதற்கான புதிய மந்திரம் - பிரதமர் மோடி உரை
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்வாமித்வா திட்ட விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக பங்கேற்றார்.
4. உலக நாடுகளை கவர்ந்த மோடியின் அமெரிக்க உரை!
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப்பயணத்தில், ‘குவாட்’ உச்சி மாநாடு, 76-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் மற்றும் அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் சந்திப்பு ஆகிய நேரங்களில், அவருடைய பேச்சுவார்த்தை, ஆற்றிய உரைகள் எல்லாமே தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தன.
5. டெல்லி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டப்பணியை மோடி பார்வையிட்டது சிந்தனையற்ற செயல்: காங்கிரஸ்
சென்டரல் விஸ்டா திட்டப்பணியை பார்வையிட்டது சிந்தனையற்ற, உணர்வற்ற செயல் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேசினார்.