இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 3 பேர் கைது - போதைபொருள் பறிமுதல்


இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 3 பேர் கைது - போதைபொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Aug 2021 8:31 AM GMT (Updated: 25 Aug 2021 8:31 AM GMT)

95 கிலோ போதைப்பொருளுடன் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையமுயன்ற வங்காளதேசத்தினர் 3 பேரை எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

 



கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா-வங்காளதேச நாடுகளின் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று இரவு எல்லைப்பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.     

அப்போது, வங்காளதேசத்தில் இருந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக 3 பேர் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களை சுற்றிவளைத்து பிடித்த பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த கடத்தல் கும்பல் என்பது தெரியவந்தது. அந்த கும்பலிடம் இருந்து 95 கிலோ போதைபொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். 

இதனை தொடர்ந்து பிடிபட்ட வங்காளதேசத்தினர் 3 பேரையும் கைது செய்த எல்லைப்பாதுகாப்பு படையினர் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story