கர்நாடகாவில் கார் விபத்து: ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு


கர்நாடகாவில் கார் விபத்து:  ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 3:25 AM GMT (Updated: 2021-08-31T12:00:31+05:30)

கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.


பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த, சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது.  இதுதவிர, கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

இந்த காரை எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டியுள்ளார் என்றும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story