சையது அலி ஷா கிலானி உடல் மீது பாக். கொடி போர்த்தப்பட்டதால் சர்ச்சை; போலீசார் வழக்குப்பதிவு


சையது அலி ஷா கிலானி உடல் மீது பாக். கொடி போர்த்தப்பட்டதால் சர்ச்சை; போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 Sep 2021 6:10 PM GMT (Updated: 4 Sep 2021 6:10 PM GMT)

காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை தனது 92 வயதில் காலமானார்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான  சையது அலி ஷா கிலானி  வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். நீண்ட காலம் உடல் நல  பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த கிலானி கடந்த புதன் கிழமை இரவு காலமானார். கிலானியின் மறைவுக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

கடந்த புதன்கிழமை இரவு கிலானியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது  ஹைடெர்போரா இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது.  அப்போது அவரது உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. 

Next Story