கர்நாடகத்தில் தொழில் தொடங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளோம்: மந்திரி முருகேஷ் நிரானி


கர்நாடகத்தில் தொழில் தொடங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளோம்: மந்திரி முருகேஷ் நிரானி
x
தினத்தந்தி 9 Sep 2021 1:56 AM GMT (Updated: 9 Sep 2021 1:56 AM GMT)

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகத்திற்கு இதுவரை ரூ.62 ஆயிரத்து 85 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் வந்தன. கடந்த 2019-20-ம் ஆண்டில் கர்நாடகம் ரூ.30 ஆயிரத்து 746 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதே போல் கடந்த 2020-21-ம் ஆண்டு ரூ.56 ஆயிரத்து 884 கோடி முதலீடுகள் வந்துள்ளன. தேசிய அளவில் கர்நாடகம் 3-வது இடத்தை பிடித்தது. முதலீடு செய்ய வரும் தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைசாளர முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்க உதயோக் மித்ரா என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கர்நாடகத்தில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகத்தில் தொழில் தொடங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளோம். தொழில் நிறுவனங்களுக்கு உதவ பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் சார்பில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் பயன்படுத்தாமல் இருந்தால் அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும்.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

Next Story