4வது ஆண்டாக 2வது இடம்; சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் சாதனை


4வது ஆண்டாக 2வது இடம்; சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் சாதனை
x
தினத்தந்தி 9 Sep 2021 6:50 PM GMT (Updated: 2021-09-10T00:20:46+05:30)

நாட்டின் கல்வி அமைச்சகத்தின் இந்திய தரவரிசை பட்டியலில் 4வது ஆண்டாக சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் 2வது இடம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் மருத்துவ பல்கலை கழகத்திற்கான கல்வி அமைச்சகத்தின் இந்திய தரவரிசை பட்டியல் 2021 வெளியிடப்பட்டு உள்ளது.  இதில், தொடர்ந்து 4வது ஆண்டாக சண்டிகார் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆய்வு மையம் 2வது இடம் பெற்றுள்ளது.

இதுபற்றி அந்த மையத்தின் இயக்குனரான மருத்துவர் ஜெகத் ராம் கூறும்போது, கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து 2வது இடம் பெற்று வருகிறோம்.  பெருமைக்குரிய தருணமிது.

நாட்டில் 800க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் உள்ளன.  2வது இடம் பெறுவது என்பது பெரிய சாதனை என கூறியுள்ளார்.


Next Story