நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை


நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 10 Sep 2021 11:59 AM GMT (Updated: 2021-09-10T17:29:58+05:30)

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும்  72 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


Next Story