இந்தியாவில் சாதனை அளவாக 73 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை


இந்தியாவில் சாதனை அளவாக 73 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2021 5:07 PM GMT (Updated: 2021-09-10T22:37:02+05:30)

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை சாதனை அளவாக 73 கோடியை நெருங்கியுள்ளது.புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கியது.  இதனை தொடர்ந்து, கடந்த ஜூனில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இதில், அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.  நாட்டில் மத்திய அரசு அனுமதியுடன் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை சாதனை அளவாக 73 கோடியை நெருங்கியுள்ளது.  இன்று ஒரே நாளில் இரவு 7 மணிவரையில், 56 லட்சத்திற்கும் கூடுதலான (56,91,552) கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இதுவரை நாடு முழுவதும் 72,97,50,724 அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.


Next Story