போலீசார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்: தேவேந்திர பட்னாவிஸ்


போலீசார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்: தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 11 Sep 2021 8:13 PM GMT (Updated: 11 Sep 2021 8:13 PM GMT)

காவல்துறையில் மாநில அரசு தலையீடு அதிகரித்து இருப்பதாகவும், போலீசார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

காவல்துறையில் தலையீடு
மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மகாவிகாஸ் அகாடி அரசு தொடங்கிய காலம் முதல், காவல்துறையில் தலையீடு அதிகரித்து உள்ளது. இந்த அரசாங்கம் கட்டுகோப்பான, காவல்துறையில் தலையிடுகிறது. போலீசார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். சில போலீசார் பதவி இறக்கப்பட்டு இருப்பதாகவும், ஓரங்கட்டப்பட்டு இருப்பதாகவும் சமீபத்தில் செய்யப்பட்ட பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திப்பு
சமீபத்திய பணியிடமாற்றத்தில் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்னை சந்தித்து சுட்டி காட்டி உள்ளனர். நான் முதல்-மந்திரியாக இருந்த போது, பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசி உள்ளனர். அதற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து பேசும் மரபு மராட்டியத்தில் உள்ளது. மராட்டியத்தில் ஜனநாயகம் உள்ளது. இதை மேற்கு வங்காளம் போல நடத்தப்பட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story