ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649-பேருக்கு கொரோனா


ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Sep 2021 10:30 AM GMT (Updated: 2021-09-12T16:00:16+05:30)

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ்வர், 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,16,362 - ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் மேலும்  6 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  8,098- ஆக உயர்ந்துள்ளது.   இன்று தொற்று பாதிப்புக்கு ஆளானோரில் 103 பேர் குழந்தைகள் ஆவர். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 15.87 சதவிகிதமாக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,957- ஆக உள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய சனிக்கிழமை 60,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


Next Story