தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி + "||" + Bus carrying women employees overturns in Greater Noida, one dead

உத்தரபிரதேசம்: பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

உத்தரபிரதேசம்: பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
உத்தரபிரதேசத்தில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 30 பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது.

அதிகாலை 5.30 மணியளவில் சூரஜ்பூரில் உள்ள தில்படா பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 வயது நிரம்பிய இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பெண்கள் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்சின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய பஸ் டிரைவரை தீவிமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கு:பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3. ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது
ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
4. உத்தரபிரதேசத்தில் துணை சபாநாயகர் ஆகிறார் சமாஜ்வாடி அதிருப்தி எம்.எல்.ஏ.!
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆதரவுடன் சமாஜ்வாடி அதிருப்தி எம்.எல்.ஏ. துணை சபாநாயகர் ஆகிறார்.
5. உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை
உத்தரபிரதேசத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.