தேசிய செய்திகள்

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல் + "||" + A political party experienced fever soon after India crossed

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்
ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
புதுடெல்லி, 

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இதன் பலனாக நேற்று ஒரே நாளில்  2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டது.  தடுப்பூசி போட தொடங்கிய நாளில் இருந்து நேற்றுதான் அதிகளவில் போடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த சாதனை எண்ணிக்கை பிரதமர் மோடியையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் இன்று கோவா மாநில சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடி தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
 
அப்போது அவர், தடுப்பூசி செலுத்துவதில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியல் விமர்சனத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”தடுப்பூசி போட்டால்தான் காய்ச்சல் வரும் என்றார்கள். ஆனால் ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கே (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது ” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த நமல் ராஜபக்சே
சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு நமல் ராஜபக்சே பரிசளித்தார்.
2. ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன் - பிரதமர் மோடி
தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
3. வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
4. கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி
கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. இந்தியாவை உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் மோடி
இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.