தேசிய செய்திகள்

‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் + "||" + "Event Over": Rahul Gandhi On Vaccine Record On PM Modi's Birthday

‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி  விமர்சனம்
மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாட்டில் ஒரு நாளில் போடப்பட்ட  தடுப்பூசி எண்ணிக்கையில் புதிய சாதனையாக அது அமைந்தது. 

இந்த நிலையில்,  நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மீண்டும் குறைந்துவிட்டதாக சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்  “நிகழ்ச்சி முடிந்து விட்டது” எனப் பதிவிட்டுள்ளார். 

தனது பதிவோடு,  கடந்த 10 நாட்களில் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த வரைபடத்தையும் பகிர்ந்துள்ளார். கோவின் இணையதளம் வாயிலாக எடுக்கப்பட்ட அந்த தரவுகளின் படி, சாதனை எண்னிக்கைக்கு பிறகு நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்டில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது: ராகுல் காந்தி
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்-நிலச்சரிவால் 34-பேர் பலியாகி உள்ளனர்.
2. வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
3. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 97 கோடி
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 97 கோடியை தொட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.