தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் பலி + "||" + Maharashtra reports 3,413 new COVID19 infections, 8,326 recoveries and 49 deaths today.

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் பலி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 3,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,21,915 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,38,518 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 8,326 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,36,887 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 42,955 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலை ஆகிறார்
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன், இன்று (சனிக்கிழமை) விடுதலை ஆகிறார். அபராத ெதாகையை செலுத்தாததால் கூடுதலாக அவர் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவித்தார்.
2. நீட் தேர்வு விலக்கு: கவர்னரை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்.
3. திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு
அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன்மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளது.
4. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.