தேசிய செய்திகள்

அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது + "||" + 453 Land Brokers Arrested In Assam In Overnight Drive

அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது

அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது
அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி, 

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 453 நிலத்தரகர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘மாநிலத்தில் இடைத்தரகர்கள் ராஜ்ஜியத்தை ஒழிக்கும்விதமாக சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களை தொந்தரவுபடுத்தும் இடைத்தரகர்களின் செயல்பாடு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் செயல்பட அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது, பொதுமக்களும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்து முறைப்படியே தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள வேண்டுமே தவிர, இடைத்தரகர்களை நாடக்கூடாது’ என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்தவர் கண்ணீர் புகார் மோசடி நபர் அதிரடி கைது
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்த நபர் கண்ணீருடன் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.
2. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது
சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு
சென்னையில் வயதானவர்களிடம் பணம், நகை பறிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
4. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.
5. காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை; 70 இளைஞர்கள் கைது
காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய சோதனையில் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.