தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு + "||" + 204 new COVID-19 cases in J&K, no virus-related death

ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 204- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு இன்று தொற்று பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. 

ஆறுதல் அடையும் வகையில் ஜம்மு காஷ்மீரில் இன்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 204 பேரில்  45 பேர்  ஜம்மு டிவிஷனையும் 159 பேர் காஷ்மீர் டிவிஷனையும் சேர்ந்தவர்கள். 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி 221 பேருக்கு தொற்று உறுதியானது. அதன்பிறகு தற்போதுதான் தொற்று பாதிப்பு 200-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,536- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட அடர்ந்த காடுகளில் இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி- பரூக் அப்துல்லா
காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.