தேசிய செய்திகள்

இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை + "||" + Infiltration of Afghan terrorists into India ...? Intelligence alert

இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை

இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை
இந்தியாவுக்குள் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த கூடும் என உளவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் பண்டிகை காலம் வரவிருக்கிற நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதிகளுடன் இணைந்து, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி காஷ்மீரில் தாக்குதல் நடத்த கூடும் என உளவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, லஷ்கர் இ தொய்பா, ஹர்காட் உல் அன்சார் மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நாட்டுக்குள் ஊருடுவ கூடும்.

அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதிகள் உதவிட கூடும்.  இதுபோன்ற 40 பயங்கரவாதிகள் பூஞ்ச் ஆற்றை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ பயிற்சி பெற்றுள்ளனர்.

அவர்கள் டிபன் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்கள்.  இதற்கான மூல பொருட்களை இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட கூடிய நபர்கள் வழங்குவார்கள் என தெரிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. கனமழை எச்சரிக்கை; டேராடூனில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் நாளை மூடப்பட்டு இருக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
2. உத்தரகாண்டுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை
உத்தரகாண்டில் நாளை கனமழை பெய்யும் என்றும் அதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
3. மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வோர் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை மொத்தமாக வாங்குவோர் மற்றும் விற்பனை செய்யும் மதுக்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
4. வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து
மேற்கு வங்காளத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.